கந்த சஷ்டி விரதம்
மும்மலங்களை அழித்த முருகப்பெருமானின் விரதம். முருகன் கோயில் கொண்டுள்ள எல்லா ஆலயங்களிலுமே கந்தசஷ்டி விரதம் மிகச் சிறப்பாக ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி அன்றுதான் முருகப் பெருமான் சூரபத்மனை அழித்த நாள். முழு முதற் கடவுளாக கலியுகக்கந்தப் பெருமான் போற்றப்படுகின்றார்.
யாழ்ப்பாணம் சிலிக்கன்; பள்ளத்தாக்காகுமா? அது ஒரு கனவுலக மாயை!
அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தை அடுத்த சிலிக்கன் வலி(Silicon Valley) ஆக்கப் போகின்றோம் என்று ஒரு சிறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர் இக்கருத்து யாழ் தகவல் தொழில் நுட்பவியலாளர்கள் மத்தியில் பரவலாக பிரச்சாரப்படுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு பிரச்சாரம் செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயம்.
முடக்குவாதத்துக்கு அருமருந்தான மஞ்சள்!
பார்க்கின்சன் நோய் எனப்படும் முடக்குவாதத்துக்கு மஞ்சள் அருமருந்தாக இருக்கிறது என்று அமெரிக்க ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய உணவு மற்றும் பாரம்பரிய மருந்துகளில் மஞ்சளுக்கு முக்கிய இடம் உண்டு. மஞ்சளின் மருத்துவ குணங்கள் தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை ஆராய்ச்சியாளர் பாசிர் அகமது மற்றும் லிசா லேபிடஸ் தலைமையில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
ஒரு சாமானியன், சக்ரவர்த்தியான சரித்திரம் பற்றிய சுவாரஸ்யத் தகவல்!
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கம் தந்த மாவீரன் அலெக்ஸாண்டர் தி கிரேட், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு பிரா ன்ஸ் தந்த மாவீரன் நெப்போலியன் பொனபார்ட். அலெக்ஸாண்டர் ஒரு கிரேக்கப் புயல் என்றால் நெப்போலியன் ஒரு பிரெஞ்சு பிரெளயம். இருவருக்குமிடையே பல ஒற்றுமைகள் இருந்தாலும் ஒரு முக்கி யமான வேற்றுமை இருந்தது. ஒரு மன்னனுக்கு மகனாக பிறந்ததால் கிரேக்கத்தை ஆண்டான் அலெக்ஸாண்டர்.
அழித்த புக்மார்க்(BookMark) திரும்பப் பெற
இன்டர்நெட் உலாவில் புக்மார்க்குகள் முக்கிய இடம் வகிக்கின்றன. நாம் அடிக்கடி செல்ல விரும்பும், முக்கிய தளம் எனக் கருதும் தளங்களுக்கான முகவரிகளைக் குறித்து வைப்பதே புக்மார்க். ஒவ்வொரு முறையும், தள முகவரியினை டைப் செய்திடாமல், இந்த புக்மார்க்குகளில் கிளிக் செய்து தளத்தினைப் பெறலாம். இவ்வளவு முக்கிய புக்மார்க்குகளைத் தவறுதலாக அழித்துவிட்டால் என்ன செய்வது? திரும்பப் பெறும் வழிகள் எவை? இங்கு பார்க்கலாம்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ன் இடைமுகம்(IE 10 Interface) குறித்த தகவல்கள்
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய அடுத்த இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10ல், புதிய இடைமுகம்(Interface) ஒன்றை வழங்குகிறது. இது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. விண்டோஸ் 8 பயன்படுத்த இருவகை இடைமுகம் கிடைக்கின்றன. வழக்கமான தொடு திரை இல்லாத பயன்பாடு மற்றும் தொடுதிரை பயன்பாடு. இவை இரண்டிலும் டைல் ஐகான்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அழகுக் குறிப்புகள்
தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
500 ஆண்டுகளாக தடைபடாமல் நடக்கும் பூசை
ராமாயணத்தில் வரும் வானர ராஜ்யம் கிஷ்கிந்தா இருப்பது எங்கே? எந்த ஊர் சந்தையில் ஒரு காலத்தில் வைரங்கள் விற்கப்பட்டது? யுனெஸ்கோ வேர்ல்ட் ஹெரிடஜ் சைடில் இடம் பெற்றுள்ள தலம் எது? திருப்பதியில் ஒரு மன்னரின் சிலையும் அவரது பெயரில் மண்டபமும் உள்ளது. அந்த அரசர் யார்? எங்கு பார்த்தாலும் கோயில்களும், சிலைகளும் நிறைந்திருக்கும் ஊர் எது? சுமார் ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாக தொடர்ந்து பூசை நடப்பது எந்தகோயிலில்?










